தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை அனுமதிக்க முடியாது - இலங்கை அதிபர்
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை அனுமதிக்க முடியாது என இலங்கை அதிபர் பேசியுள்ளது தமிழக மீன்வர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க, இலங்கைக்கு சொந்தமான பகுதிகளில், இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடிப்பது தடுக்கப்படும் என கூறினார். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவும், இலங்கை மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் கூறினார்.
நேற்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 3 விசைப்படகுகளுடன் 21 மீனவர்களைச் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். தொடர்ச்சியாக இலங்கை கடற்படை கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தமிழக மீன்வர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், இலைங்கை அதிபரின் இந்த பேச்சி பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.