மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்
வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து நேற்று மதியம் 2 மணி அளவில் மீன்பிடிப்பதற்காக 3 பைபர்படகுகளில் 14 பேர் கடலுக்குச் சென்றனர். இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு 4 பைபர் படகில் வந்த 14 இலங்கை கடல் கொள்ளையர்கள் 3 பைபர் படகையும் வழிமறித்து மீனவர்களை தாக்கி 5 லட்சம்மதிப்புள்ள மீன்பிடி வலைகளை கொள்ளையடித்த கொண்டு மீன்பிடி வலைகள், டீசல் கேன், செல்போன் ஜிபிஎஸ் கருவி, உள்ளிட்ட மீனிப்பிடி உதாரணங்களை கொள்ளையடித்து கொண்டு ஒரு படகில் இருந்த இன்ஜினையும் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றனர்.
தாக்குதலில் காயம் அடைந்த செல்வராஜ், மூர்த்தி, தனபால் ஆகிய மூன்று மீனவர்கள் நாகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை 4 படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் இருப்புகம்பி கொண்டு தாக்கி மற்றும் உபகரணங்களை கொள்ளையடித்த சம்பவம் மீனவ கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


