22 வயதில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவி; போட்டியின்றி தேர்வான ஸ்ரீலேகா!

 
sri lekha

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 12ம் தேதி வெளியாகின. வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் கடந்த 20ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

sri lekha

இன்று காலை முதல் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. 20ம் தேதி  பதவியேற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மறைமுக தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 மாவட்டங்களிலும் மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக 22 வயதான இளம் பொறியியல் பட்டதாரி ஸ்ரீலேகா என்பவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  திமுகவை சேர்ந்த ஸ்ரீலேகா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மானூர் ஒன்றியத்தில் 41 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. அந்த ஊராட்சிகள் அனைத்திற்கும் இனி ஸ்ரீலேகா தான் தலைவர். 22 வயதிலேயே ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஸ்ரீலங்காவிற்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. இந்த உள்ளாட்சித் தேர்தலில் இளம்பட்டதாரிகள் பலர் வெற்றி பெற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.