கார், லாரி, பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து!

 
accident accident

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கார், லாரி, பேருந்துகள் என அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குதிரை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்க்காமல் நெஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் அந்த குதிரை மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், பின்னால் அடுத்தடுத்து அதிவேகமாக வந்த லாரி மற்று இரண்டு பேருந்துகள் ஒன்ற மீது ஒன்று அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கார், லாரி மற்றும் பேருந்துகளில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

இந்த விபத்து காரணமாக பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.