ஜீயர் குறித்து அவதூறு- ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது

 
ச் ச்

ஜீயர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்து சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஶ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து சர்ச்சையாக பேசி வீடியோ வெளியிட்ட  ஸ்ரீரங்கம் ரங்கராஜனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஜீயர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் சமூக வலைதளங்களில் ஜீயர்கள் குறித்து அவதூறுகள் பரப்பப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வீடியோவை யூடியூபில் இருந்து நீக்கவும் புகார் மனுவில் தெரிவித்திருந்தார், புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஜீயர்கள் குறித்து அவதூறாகவும், துணை முதல்வர் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் என்பவரை சென்னை மத்திய  குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர் 

புதிய தலைமுறை

அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தனது வீட்டுக்கு காவல்துறையினர் வந்ததாகவும், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் தன் மீது புகார் கொடுத்திருக்கலாம் என்றும் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பதிவிட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.