வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு குரல் கொடுத்தவர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் - ராமதாஸ் ட்வீட்
எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாளில் சமூகநீதிக்கான அவரது பங்களிப்பை நாம் போற்றுவோம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில் சமூகநீதிக்கான அவரின் பங்களிப்பைப் போற்றுவோம்!
விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில் சமூகநீதிக்கான அவரின் பங்களிப்பைப் போற்றுவோம்!
— Dr S RAMADOSS (@drramadoss) September 16, 2023
இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 106-ஆம் பிறந்தநாள் இன்று… pic.twitter.com/X4XjnFi3qI
இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 106-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. உழவர் உழைப்பாளர் கட்சியை நிறுவிய அவர், அக்கட்சியின் மூலம் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு குரல் கொடுத்தவர். அவரது பிறந்த நாளில் சமூகநீதிக்கான அவரது பங்களிப்பை நாம் போற்றுவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.