அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் தேங்கி நிற்கும் மழைநீர்

 
ட் ட்

கனமழை எதிரொலியால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். குறிப்பாக இராசிபுரம் அரசு மருத்துவமனை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் கர்ப்பிணி பெண்கள் தங்கியுள்ள வார்டு மற்றும் பொது வார்டுகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி  நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து செய்தி ஒளிபரப்பானதால் மாவட்ட ஆட்சியர் S.உமா உடனடியாக  அரசு மருத்துவமனை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும், அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாற்று இடத்தை தயாராக வைக்க வேண்டும், மழைநீர் தேங்காதவாறு ராசிபுரம் நகராட்சி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். தொடர்ந்து வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களின் வாடுக்கு சென்ற ஆட்சியர் இரவு மின்சாரம் தடைப்பட்டு இருந்ததை விளக்கம் கேட்டு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் நலமாக உள்ளதை கேட்டறிந்தார்.