தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழாவுக்கு ஸ்டாலின் வருகை
Updated: Sep 17, 2025, 17:40 IST1758111055777
கரூர் மாவட்டம் கோடாங்கிப்பட்டியில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவிற்கு தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் வருகை புரிந்தார்.
கரூர் கோடங்கிபட்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான விழா மேடையில் இன்று மாலை திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றுவருகிறது. விழாவிற்கு திமுக கழக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். கரூர் சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு மண்டல பொறுப்பாளரும் எம்எல்ஏ செந்தில் பாலாஜி வரவேற்று பேசவுள்ளார். விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.


