தேனி உழவர் சந்தையில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின்

 
tn

உழவர் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 180க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் மூலம் விவசாயிகள் பெரும் பயனடைகின்றனர். தேனி உழவர் சந்தையில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களிடம் விவசாயிகள் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டனர் .

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (10.4.2024) தேனி மாவட்டம் உழவர் சந்தை, விளையாட்டுத் திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.இந்நிகழ்வின் போது, அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி, மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் ராமகிருஷ்ணன், தி.மு.க. வேட்பாளர் திரு.தங்க தமிழ்ச் செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் திரு.மூக்கையா ஆகியோர் உடன் இருந்தனர்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்டங்கள் தோறும் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாக, காலை வேளைகளில் பலதரப்பு மக்களை நடந்து சென்று சந்திப்பதும், அவர்களின் கருத்துக்களை கேட்டறிவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அதனடிப்படையில் இன்று (10.4.2024) தேனியில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக, காலை 8.00 மணியளவில் தேனி விளையாட்டுத் திடலில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி, அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், உழவர் சந்தைக்குச் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபரிகள், பொதுமக்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார். முதலமைச்சர் நிலையிலிருந்தாலும், மிகவும் எளிமையான முறையில் பொதுமக்களை நேரில் வந்து சந்தித்ததை எண்ணி மகிழ்ந்த அவர்கள், வழங்கிய புத்தகங்கள், பூங்கொத்துகள், சால்வைகள் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

tn

அப்போது பழ வியாபாரி ஒருவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உருவத்தினை பழத்திலேயே வரைந்து அதனை முதலமைச்சர் அவர்களுக்கு மகிழ்ச்சியோடு பரிசாக வழங்கினார். அங்கு பெற்றோர்களுடன் காய்கறி வாங்கிட வருகைதந்த சிறுவர், சிறுமியர்களிடம் படிப்பு குறித் முதலமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார். பின்னர், அங்கிருந்த தேநீர் கடையில், மக்களோடு மக்களாக அமர்ந்து தேநீர் அருந்தினார். அங்கு திரளாக கூடிய பொதுமக்கள் திட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் ஆகியவை பெரிதும் பயன் தருவதாக தெரிவித்தனர். குறிப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள உழவர்களும், பெண்களும் தங்களின் விளைபொருட்களை கட்டணமில்லாமல் அரசுப் பேருந்துகளில் கொண்டு வந்து உழவர் சந்தையில் வியாபாரம் செய்வதன் மூலம் நல்ல லாபம் பார்ப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து, எங்களது வாழ்நாளில், தங்களுடன் செல்பேசி மூலம் புகைப்படம் எடுத்துக் கொள்வது மிகப்பெரிய பாக்கியம் என்று உணர்ச்சிப் பொங்க தெரிவித்தனர்.

tn

அங்கு பெருந்திரளாக கூடியிருந்த அனைவரிடம் இந்த அரசினால் செயல்படுத்தப்படும் அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்திட உங்கள் அனைவரின் நல் ஆதரவினையும், தற்போது நடைபெறம் நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு.தங்க தமிழ்ச் செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை உற்சாகமாக வரவேற்று, நீங்களே எங்களிடம் நேரிடையாக வந்து எளிமையோடும், உரிமையோடும் வாக்கு சேகரிப்பது எங்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது என்றும், வருகின்ற தேர்தலில் மட்டுமல்ல எப்போதும் எங்களுடைய வாக்கு உதயசூரியனுக்கு தான் என்று உறுதிபடக் கூறினர்.

இந்த உழவர் சந்தையில் 60 கடைகள் இருப்பதாகவும், இங்கு அனைத்து விளைபொருட்களும் நியாயமான விலையிலும் தரமாகவும் பொதுமக்களுக்குக் கிடைப்பதாகவும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தேனி, கம்பம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் 7 உழவர் சந்தைகள் உள்ளதாகவும், இதில் உள்ள 244 கடைகளில் நடைபெறும் அன்றாட வியாபாரத்தின் மூலம் விவசாயிகள் ஆகிய தங்களின் வாழ்வதாரம் முன்னேறி உள்ளதாகவும் தெரிவித்தனர். குறிப்பாக இந்த உழவர் சந்தையில் மட்டும் நாள்தோறும் 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் வந்து காய்கறிகள் வாங்கிச் செல்வதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். மேலும், இன்று மாலை தேனி லட்சுமிபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு வருகைதந்து, தங்களின் எழுச்சிமிகு பேச்சினை கேட்க மிகுந்த ஆவலாக உள்ளதாகவும் பொதுமக்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.

tn

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது பாராட்டுக்குரியது. மேலும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படாத திட்டங்களான, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் உள்ளிட்ட எண்ணற்றத் திட்டங்களை திறம்படச் செயல்படுத்தி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. இவை அனைத்தையும் மாண்புமிகு முதலமைச்சராகிய நீங்கள் நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்கின்ற நம்பிக்கை உள்ளதாக அங்கிருந்த வியாபாரிகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். இதனால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த திட்டங்களாலும், செயல்படுத்தப் போகும் திட்டங்களாலும், தேனி மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிடும் திரு.தங்க தமிழ்செல்வனின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.