திமுக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவை அமைத்த ஸ்டாலின்
திமுக கட்சியை மறு கட்டமைப்பு செய்ய திமுக தலைவர்மு க ஸ்டாலின் குழு ஒன்றை அமைத்துள்ளார். இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன்,
சக்கரபாணி,சிவசங்கர் மற்றும் தமிழரசி ரவிக்குமார், அப்துல்லா, பரந்தாமன், முரசொலி, எழிலன், கே.பி.கருணா போன்ற முக்கிய நிர்வாகிகள் இந்த மறு சீரமைப்பு குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவானது மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, கட்சியின் சார்பு அணிகளின் மறுசீரமைப்பு, தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகள், தேர்தல் பணிகளை செய்வதற்கான நிரந்தர அமைப்பாக செயல்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தலைமைக்கான பரிந்துரைகளை மேற்கொள்ளும் Think Tank போன்றதொரு அமைப்புக்கான தேவை, அக்குழுக்களுக்கான பணிகளின் மறுவரையறை உள்ளிட்டவை குறித்தும் பரிந்துரைக்களை இக்குழு ஆகஸ்ட் முதல் வாரத்தில் மு.க.ஸ்டாலினிடம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தகால குறைகளை களைந்து, மக்களிடம் புதிய வடிவில் செல்வதற்கு மறுசீரமைப்பும், மறுகட்டுமானமும் மிக அவசியம் என்பதை நாம் உணர்ந்து தயாராக வேண்டும். கிடைக்கப்பெற்றுள்ள கருத்துகள், ஆலோசனைகளை பரிசீலித்து மாற்றங்களைப் பரிந்துரைக்க மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

