INDIA கூட்டணி ஆலோசனையில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
tn

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.  ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியில் முதல் 2 ஆலோசனை கூட்டங்கள் முறையே பீகார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இதையடுத்து இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் 2 நாட்கள் நடைபெற்றன.

tn

இந்த ஆலோசனை கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இந்தியா கூட்டணி 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது. அதேபோல் 19 பேர் கொண்ட பிரச்சாரக் குழுவை அமைத்துள்ளது. இதையடுத்து மத்தியபிரதேச மாநிலம் போபாலில் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து  'இந்தியா' கூட்டணி கட்சிகளின் 4வது ஆலோசனை கூட்டம் டெல்லியில் கடந்த 19ஆம் தேதி  நடைபெற்றது. 

tn

இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கியது. காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அவருடன் திமுக எம்.பி., கனிமொழியும் பங்கேற்றுள்ளார். கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.