ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் திமுகவின் நிலைபாடு என்ன?? ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்...

 
டிடிவி தினகரன், மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டுமென , அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

காவிடி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு விவசாய சங்கங்கள், அரசியல் தலைவர்கள்  பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் .  திமுக அரசு எதிர்க்கட்சியாக இருந்த போது  ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு  கடுமையான் எதிர்ப்பை பதிவு செய்து வந்தது.   இந்நிலையில் தற்போது  காவிரி பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னை பெட்ரோகெமிக்கல் இணைந்து 31ஆயிரம் கோடி‌ மதிப்பில் 90லட்சம் டன் சுத்திகரிப்பு திறன் நிலையத்தை நிறுவிக் கொண்டிருக்கிறது.

ஸ்டாலின்

இது தொடர்பாக  கடந்த மாதம் காவிரி டெல்டாவில் புதிய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஏல அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போதே இதற்கு  எதிர்ப்பு தெரிவித்திருந்த டிடிவி தினகரன் ,  எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயத்திற்கு ஆதரவானவர்கள் போல காட்டிக்கொண்டு வசனம் பேசுவதையும் , ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு எதிரான (ஹைட்ரோ கார்பன் போன்ற) திட்டத்திற்கு கையெழுத்து போடுவதையும் தி.மு.க வாடிக்கையாக வைத்திருக்கிறது  என்று விமர்சித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து தற்போது, தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் திமுக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ”அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டப் பணிகள் தமிழக அரசின் அனுமதியோடு தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது பற்றியும் அவர் விளக்க வேண்டும்.

டிடிவி தினகரன்

இப்பிரச்னையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது பேசிய கருத்துகளில் திமுக இப்போதும் உறுதியாக இருக்கிறதா?என்பதையும் தெளிவுபடுத்தவேண்டும். தமிழ்நாட்டின் விளைநிலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால்,மத்திய அரசு இதில் பிடிவாதம் காட்டுவது மக்களின் விருப்பத்திற்கு எதிரானதாகும். எனவே, எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகளை தமிழகத்தின் மீது வலிந்து திணிக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்”  என்று குறிப்பிட்டுள்ளார்.