எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
cm stalin

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க ஜூலை 17ம் தேதி பெங்களூர் செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

tn

எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் வருகிற 17, 18 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.  2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஜூன் 13-ல் பாட்னாவில் நடைபெற்ற முதல் ஆலோசனை கூட்டத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. வரும் 17 மற்றும் 18ஆம் தேதியில் பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க திமுகவின் தோழமைக் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

stalin

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எதிர்கட்சிகள் 2வது கூட்டத்தில் பங்கேற்க வரும் 17ம் தேதி பெங்களூர் செல்கிறார் . முன்னதாக 17ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களுக்கு இரவு விருந்து அளிக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.  பாட்னா கூட்டத்தில் ராகுல் பங்கேற்ற நிலையில் பெங்களூர் கூட்டத்தில் சோனியா பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.