ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் விலை குறையப்போகுது..!

 
1

ஏப்ரல் 1ம் தேதி முதல்  40 பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியானது 15 லிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

செல்போன்கள், LED  மற்றும் LCD வகை தொலைக்காட்சிகளுக்கான இறக்குமதி வரை 20 லிருந்து 15 சதவீதம் ஆகவும், இறால், மீன் போன்ற கடல் உணவுகளுக்கான இறக்குமதி 15லிருந்து 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது

.எலக்ட்ரிக் கார்கள், மிதிவண்டி மற்றும் துருப்பிடிக்காத எக்கு ஆகியவற்றின் வரிகளும் குறைய  இருப்பதாக அந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 36 முக்கிய மருந்துகளுக்கு அடிப்படை வரிகளில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் மற்றும் புற்றுநோய்பட உயிர் காக்கும் மருந்துகளின் விளையும் குறைய வாய்ப்பிருப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருப்பதால் நடுத்தரவர்க்கத்தினர்  உற்சாகம் அடைந்துள்ளனர்.