தனியார் பேருந்துகளை தொலைதூர சேவைக்கு பயன்படுத்த அரசு போக்குவரத்து கழகம் திட்டம்

 
s s

தனியார் பேருந்துகளை தொலைதூர சேவைக்கு பயன்படுத்த அரசு போக்குவரத்து கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் புக் பண்ணுங்க... வருஷம் பூரா இலவசமா ஊர் சுத்துங்க- தமிழ்நாடு அரசு  போக்குவரத்து கழகம் சூப்பர் அறிவிப்பு


சென்னை - திருச்சி, சென்னை -  மதுரை, சென்னை - நெல்லை,  சென்னை - கோவை, திருச்சி - மதுரை, கோவை - மதுரை உள்ளிட்ட தொலைதூர வழித்தடங்கள் தேசிய மயமாக்கப்பட்ட ( Nationalised route ) வழித்தடங்களாக உள்ளன. (( தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களுக்குள்ளும் சில நூறு கிலோமீட்டருக்கு உள்ளாக open route இருக்கும்  , திருச்சி - பெரம்பலூர் , விழுப்புரம் - திருச்சி , மதுரை - திருமங்கலம் போல - அந்த open route எல்லைக்குள் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்படும்)) தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC ), அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) உள்ளிட்ட அரசு பேருந்துகளை மட்டுமே இயக்க முடியும். (( தனியார் பேருந்துகளில் omni பேருந்துகளுக்கு மட்டும் தனி விதிமுறை என்பதால் omni  பேருந்துகளுக்கு தேசிய வழித்தடத்தை பயன்படுத்த அனுமதி உண்டு , normal private stage bus களுக்கு அனுமதி இல்லை ))  

இந்நிலையில் தேசிய மயமாக்கப்பட்ட வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அரசு சார்பில் இயக்கும் வகையில் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வரைவு அறிக்கை குறித்து 30 நாட்கள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். வரைவு அறிக்கை ஏற்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டால் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும் சூரசம்காரம் போன்ற விழாக்களின் போதும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து அரசு சார்பில் தனியார் பேருந்துகளை தொலைதூர சேவைக்கு பயன்படுத்த முடியும். (( தற்போது உள்ள நடைமுறைப்படி ஒரே போக்குவரத்து கழகத்திற்குள் மட்டும் அரசு சார்பில், தனியார் பேருந்துகள் ஒப்பந்த முறையில் எடுத்து இயக்கப்படுகின்றன. உதாரணம் திருவண்ணாமலை தீபத்திற்காக விழுப்புரம் கோட்ட பேருந்துகள் விழுப்புரம் வேலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படும். புதிய அரசாணை நிறைவேறினால் நெல்லையில் இருந்து கூட நேரடியாக தி.மலைக்கு தனியார் பேருந்தை எடுத்து அரசு இயக்க முடியும் ))ஜனவரி 8 ம் தேதி வரை பொதுமக்கள், பேருந்து உரிமையாளர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்  என்று போக்குவரத்து துறை செயலாளர் அறிவித்துள்ளார்.