முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 
tn

77ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதையடுத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட அவர் பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

tn

இதையடுத்து சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  அரசு பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில் கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் இளம் பெண்களுக்கு 100 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.  சுமார் 2 லட்சத்து 11 ஆயிரம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 350 கோடி ரூபாய் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வரும் கல்வியாண்டு  முதல் 31,008 அரசு பள்ளிகளிலும் பயிலும் 15 லட்சத்து 75 ஆயிரம்  மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வரும் ஆக சிறப்பாக 25 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்.

tn

 அத்துடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில் திட்டம் தொடங்க இருப்பதாகவும்,  இதற்காக நிதியாண்டில் 44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்தார்