”ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி இல்லை” - தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

 
tn

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்துள்ளது.

sterlite copper

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த ஐந்து ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.  இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவும் , பசுமை வளாகத்தை பராமரிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வேதாந்தா நிறுவனம் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தது. இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த மே 4ஆம் தேதி விசாரித்தது. இதனிடையே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

govt

இதனையடுத்து தூத்துக்குடி ஆட்சியர் கடந்த 29ஆம் தேதி  ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின்படி உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ளது. பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கழிவுகளை அகற்றும் பணிகளுக்கான செலவை  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏற்க உத்தரவிட்டுள்ளது . 

ttn

இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.  ஆலையை திறக்க கூடிய வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக வாதம் தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கின் இறுதி விசாரணை நாளை தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு பூர்வமாக வாதம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.