வாகனங்களில் ஸ்டிக்கர்- மருத்துவர்களுக்கு அனுமதி இல்லை

 
டாக்டர்

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Highcourt

தனிநபர் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்காத அடையாள ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. முதற்கட்டமாக காவல்துறை என ஸ்டிக்கர் ஒட்டி உள்ள வாகனங்களை நிறுத்தி சோதனையிட முடிவு வாகன நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று  காவல்துறை விளக்கமளித்துள்ளது.  அதேபோல் ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஸ்டிக்கர் ஒட்டி கொள்ளலாம். ஆனால் அரசு அங்கீகாரம் செய்த அந்த செய்தி நிறுவனத்தின் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. யூ டியூப்பர்ஸ் பிரஸ் ஸ்டிக்கர் பயன்படுத்த முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட அனுமதி கோரிய தமிழ்நாடு மருத்துவர்கள் நலச்சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். அதில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற அறிவிப்பால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணி நிமித்தமாக அவசரமாக பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு தனியாக விலக்களிக்க சட்டத்தில் இடமில்லை என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்தர ஆணையிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது.