இந்திய கார்ப்பரேட்டுகளை குறைகூறுவதை நிறுத்துமா திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்?

 
bjp

இந்திய கார்ப்பரேட்டுகளை குறைகூறுவதை நிறுத்துமா? திமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று G.K.நாகராஜ்  கேள்வி எழுப்பியுள்ளார்.

tn

தமிழக பாஜக விவசாய அணி தலைவர் G.K.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் டாட்டா நிறுவனம் ரூ.10,000 கோடி முதலீடும், (40,500 பேருக்கு வேலைவாய்ப்பும்), அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.35,000 கோடியும்,ஜிண்டால் நிறுவனம் ரூ.10,000 கோடியும்(6,500 பேருக்கு வேலைவாய்ப்பும்), டி.வி.எஸ் நிறுவனம் ரூ.5,000 கோடியும்,கோத்ரெஜ் ரூ.515 கோடியும் முதலீடு செய்வதாக, செய்யப்போவதாக  பெருமைப்படுகிறார்  தமிழகமுதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்.

BJP

இந்திய நிறுவனங்களே தமிழகத்திற்கு அதிக முதலீட்டை கொடுத்திருக்கின்றன.பாரதப்பிரதமர் நரேந்திரமோடி இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணைபோகிறார் என்றுகூறி கொச்சைப்படுத்தும் திமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்கள் பேசியதை வாபஸ் பெறுவார்களா?அல்லது இனியாவது பேசுவதை நிறுத்துவார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.