வங்கக் கடலில் உருவாகிறது டானா புயல்! தமிழ்நாட்டிற்கு பாதிப்பா?
Oct 20, 2024, 12:54 IST1729409050318
வங்கக்கடலில் வரும் 23 ம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதற்கு கத்தார் பரிந்துரைத்த டானா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்த்ய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இரு நாட்களில் புயலாக வலுப்பெறும். வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை. புயல் வடமேற்காக நகர்ந்து ஒடிசா- மேற்கு வங்கத்தில் அக்டோபர் 24 காலையில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


