புயல் எதிரொலி- கிரேன், விளம்பர போர்டுகளை கீழே இறக்கி வைக்க அறிவுறுத்தல்

 
கிரேன்

அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்களை கீழே இறக்கி வைக்க வேண்டும், விளம்பரப் போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Hydraulic Truck Cranes: Components, Systems, And Repairs | Cylinders, Inc.


இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெஞ்சல் (FENGAL) புயல் 30.11.2024 அன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதலோ அல்லது விழுவதாலோ, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே, இதனைத் தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறும் அல்லது உறுதியாக நிலைநிறுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், விளம்பரப் போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விளம்பரப் போர்டுகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிபடுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்துகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.