புயல் எச்சரிக்கை- விமான பயணிகளுக்கு அறிவுறுத்தல்

 
chennai airport

புயல் எச்சரிக்கை காரணமாக விமான பயணிகளுக்கு சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Image


புயல் எச்சரிக்கைக்கு ஏற்ப, பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுமாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். புயல் எச்சரிக்கை காரணமாக வானிலை நிலவரத்தைப் பொறுத்து விமானங்கள் இயக்கப்படும் என்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் விமான சேவைகள் குறித்து பயணிகள் கேட்டறிந்து பயணத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ளுமாறும் சென்னை விமான நிலைய நிர்வாகம் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது.


பலத்த காற்று வீசும்பட்சத்தில் சிறிய ரக விமானங்களை இயக்கலாமா என்பது குறித்து பரிசீலித்து வருவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.