புயல் முன்னெச்சரிக்கை - முதல்வர் ஆலோசனை!!

 
stalin

தமிழ்நாட்டில் மழை பாதிப்புகள், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

stalin

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிச.3 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்பிருக்கிறது. டிச.4ம் தேதி மாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில், சென்னைக்கும் மசிலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. 

tnt

 தமிழ்நாட்டுக்கு நாளை முதல் வரும் 5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.  வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில்கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புயல் எச்சரிக்கை எதிரொலியாக  9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

mk stalin

இந்நிலையில்  புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.  அமைச்சர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.