டூர் போகனுமா? அரசு பேருந்தை எடுத்துட்டு போங்க... போக்குவரத்துத்துறையின் அசத்தல் அறிவிப்பு

 
govt bus govt bus

சுபநிகழ்ச்சிகள் மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

வாக்களிக்க சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்: இன்று பயணம்  செய்ய 30,000 பேர் முன்பதிவு | special buses for election day - hindutamil.in

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதனமுள்ள இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் (UD, A/C Seater cum Sleeper and Non A/C Seater cum Sleeper) தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் குழுவாக சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும், அறுபடைவீடு கோயில்கள் மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள ஒப்பந்த ஊர்தி (Contract Carriage) அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் பேருந்து வசதி ஏற்பாடு செய்து தரப்படும். மேலும், மேற்கண்ட பேருந்து வசதி சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் மற்றும் இதர இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் விபரங்களுக்கு இணையதள முகவரி www.tnstc.in மற்றும் கீழ்குறிப்பிட்டுள்ள அலை பேசி எண்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.