பிளஸ் 1 தேர்வில் தோல்வி- ரயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை

 
suicide suicide

கொடைரோடு அருகே பதினொன்றாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் ரயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் தர்மாபுரி பகுதியை சேர்ந்தவர் சூரியநாராயணன். இவரது மகன் யோக பாபு (17). இவர் அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று 11ஆம் வகுப்பு அரசு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், யோக பாபு வணிகவியல் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அதிர்ச்சியிலும், வருத்தத்திலும் இருந்த யோக பாபு, அம்மாவிடம் வெளியே சென்று விட்டு வருகிறேன் எனக் கூறி சென்றுள்ளான். நீண்ட நேரம் வரை வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் கொடை ரோட்டில் இருந்து மதுரை மார்க்கம் செல்லும் ரயில் பாதையில் ரயிலில் அடிபட்டு சிறுவன் ஒருவனின் உடல் சிதறி கிடப்பதாக கொடைரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ரயில் பாதையில் சிதறி கிடந்த உடலை கைப்பற்றிய போலீசார், அது பள்ளி மாணவன் யோகபாபு உடல் என்பதை உறுதி செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பரிட்சையில் தோல்வி காரணமாக யோகபாபு அவ்வழியே வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.