பட்டம் பெறும்போதே ஆளுநரிடம் புகாரளித்த மாணவர்! பேராசிரியர்கள் பணம் கேட்பதாக குற்றச்சாட்டு
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு ஆதிதிராவிடர் விடுதிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என பட்டம் பெற வந்த நபர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு அளித்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன், துறைச் செயலர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39 -ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பட்டம் வழங்கினர். அப்போது ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்பவர் திடீரென மேடையிலேயே பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், சில கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றை ஆளுநரிடம் வழங்கினார். மேலும் முனைவர் பட்டம் பெற வழிகாட்டும் பேராசிரியர்கள் பிஹெச்டி மாணவர்களிடம் பணம் கேட்பதாகவும், தனிப்பட்ட வேலைகளை செய்ய சொல்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.
திமுக மந்திரிகளிடம் கடிதத்தை கொடுக்காமல் நேர்மையான கவர்னரிடம் கொடுத்த மாணவர் 👇
— Saravanan (மோடியின் குடும்பம்) (@saravanan_Ind1) October 14, 2024
திராவிட கமிஷன் மாடலில்...
♦️முனைவர் பட்டம் பெற வீட்டில் பாத்திரம் கழுவு வேண்டும்
♦️1 லட்சம் லஞ்சம் தர வேண்டும்
♦️ஆதிதிராவிட மாணவர்களுக்கு சரியான விடுதி இல்லை @annamalai_k @indhavaainko… pic.twitter.com/zdOMjtyqT3
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில விழாவில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் மற்றும் துறை ச் செயலர், பல்கலைக்கழக துணை வேந்தர் பொறுப்புக் குழுவினர், பதிவாளர் உள்ளிட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்த அமைச்சர் கோ.வி செழியன் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்காக தயார் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விடுதியில் எந்த பிரச்சனையும் இல்லை என மாணவர்கள் கூறியுள்ள நிலையில், பிரகாஷ் கூறிய பிற குற்றச்சாட்டுகள் குறித்தும் பல்கலை நிர்வாகத்திடம் விசாரித்தார். குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என அமைச்சர் செழியன் தெரிவித்துள்ளார்.