2021 முதல் முயற்சி செய்தும் தோல்வி... நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை
Mar 29, 2025, 10:37 IST5:07:51 AM

நீட் தேர்வு அச்சம் காரணமாக தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தை சேர்ந்தவர் மாணவி தர்ஷினி. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தர்ஷினி 4.5.2025ல் நடக்க உள்ள தேர்வுக்கு தயாராகி வந்தார். இவர் கடந்த 2021ம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதி கட் ஆப் வராத நிலையில் இன்று சோக முடிவை கையிலெடுத்துள்ளார்.
நீட் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த தர்ஷினி, அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். மாணவி தர்ஷினி தற்கொலை சம்பவம் தொடர்பாக கிளாம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.