‘கல்விக்கு தகுதியில்லாதவன்’ என கடிதம் எழுதிவைத்துவிட்டு மாணவன் தற்கொலை

 
‘கல்விக்கு தகுதியில்லாதவன்’ என கடிதம் எழுதிவைத்துவிட்டு மாணவன் தற்கொலை

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதால் மன உளைச்சலுக்குள்ளான மாண்வன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

train

சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் உள்ள கேஆர்எம் நகரைச் சேர்ந்தவர் ஜானகி. இவரது மகன் ஜீவா(16). இவர் தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று 11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் இவர் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இதனால் கடுமையாக மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் மாணவர் ஜீவா விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார். 

death

அந்த கடிதத்தில், தன்னோட அம்மாவும் பாட்டியும் தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்ததாகவும் , 10ஆம் வகுப்பு படிக்கும் போது குறைந்த மதிப்பெண் எடுத்திருந்ததால், 11 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுகிறேன் என கூறி இருந்ததாகவும், இந்த முறையும் மதிப்பெண் குறைந்ததால் கல்விக்கு தகுதி இல்லாதவன் ஆகிவிட்டேன். அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும் எழுதி வைத்திருந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.