வெள்ளி அரைஞான் அணிந்திருந்த மாணவர் நீட் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

 
ச் ச்

திருவண்ணாமலையில் வெள்ளி அரைஞான் கயிறுடன் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு தேர்வு அறைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Image

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளி, டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி என ஆறு தேர்வு மையங்களில் 3,120 மாணவ மாணவிகள் நீட் தேர்வினை இன்று எழுதுகின்றனர்.  நீட் தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டு தேர்வு எழுதும் மாணவர்களை பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தேர்வு எழுதக்கூடிய மாணவிகள் காதுகளில் கம்பல் ஏதும் அணியாமலும் ஜடை ஏதும் போடாமலும் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கின்றனர். மாணவர்கள் பெல்ட் அணியாமலும், வெள்ளி அரைநான் கயிறு உள்ளதா? என சோதனை செய்து அனுமதிக்கின்றனர். வெள்ளி அரை நான் கயிறு அணிந்திருக்கும் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பெற்றோரே வெள்ளி அரைஞான் கயிறை அகற்றிய பிறகு மாணவன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.