நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை

 
suicide

ராசிபுரம் அருகே பள்ளியில் நடந்து வரும் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று  வந்தாக கூறப்படும் மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

suicide

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம் அத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. சலவைத் தொழிலாளி. இவரின் மனைவி சாவித்திரி. இவர்களுக்கு ஞானப்பிரியா என்ற மகளும், யாதவன் என்ற மகனும் உள்ளனர். ஞானப்பிரியா  உடுப்பத்தான்புதூர் பகுதியில் உள்ள அத்தனூர் அரசுப் பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வருகிறார். யாதவன் அத்தனூரில் உள்ள பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கிறார். மாணவி ஞானப்பிரியா, பள்ளியில் மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரையில் நடக்கும் நீட் பயிற்சி வகுப்பிற்க்கு 3 நாட்கள் சென்றதாக கூறப்படுகிறது. நீட் பயிற்சி கடினமாக இருப்பதாக  பெற்றோர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. அவர்களும் முடிந்தால் படி இல்லையென்றாலும் வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவி ஞானப்பிரியா தனது திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சடலத்தை மீட்ட வெண்ணந்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தற்கொலை மற்றும் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து, மாணவியின் தந்தை பழனிசாமி கூறுகையில், நீட் தேர்வில் வெற்றி பெற்றால் தான் டாக்டர் ஆக முடியும், நீட்டில் சேர்ந்துக்கொள்கிறேன் என் மகள் கூறிய நிலையில் நாங்களும் சரிமானு சொன்னோம். இங்கிலீசில் படிப்பு இருப்பதால்  என்னால் படிக்க முடியவில்லை என்ற புலம்பியதால் நாங்களும் முடியலனா விட்டுடுமா, இருப்பதை படி என்றோம். அதற்கு, இல்லப்பா ஏழ்மையான குடும்பம் எப்படியாவது படித்து, டாக்டர் ஆகி உங்களையெல்லாம் காப்பாற்றுகிறேன் என்றார்” எனக் கூறினார். 

இது குறித்து பள்ளியில் விசாரித்த போது நீட் பயிற்சியிக்கு இந்த பெண் பெயரே கொடுக்கவில்லை எனவும் மொத்தம் இரண்டு பேர் தான் பெயர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் வெண்ணந்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.