நீட் பயிற்சி மையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து மாணவர்கள் சித்ரவதை
நெல்லையில் நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்கள் அடித்து சித்திரவதை செய்யபடுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது..

நெல்லையில் உள்ள Jal Neet Academy என்ற பெயரில் இயங்கிவரும் நீட் பயிற்சி மையத்தில், ஆசிரியர் வருவதற்கு முன்பு சில மாணவர்கள் தூங்கியதாக கூறி, அந்த மாணவர்களை பிரம்பால் கண்மூடித்தனமாக அடித்த நீட் பயற்சி மைய உரிமையாளர் ஜலாலுதினீன் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்தம் சொட்ட சொட்ட அடித்து மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

மாணவிகள் மீதும் காலணியை தூக்கி வீசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. காலணியை வாசலில் முறையாக கழற்றி போடவில்லை எனக் கூறி, காலணியை மாணவி மீது வீசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
🔴LIVE : நெல்லையில் நீட் பயிற்சி மையத்திற்கு வரும் அடித்து சித்திரவதை என பரபரப்பு புகார் https://t.co/WUbxLEnuQc
— Thanthi TV (@ThanthiTV) October 18, 2024
பயிற்சி மாணவர்களின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தனியார் நிறுவனம், திட்டமிட்டு காலணியால் தாக்கவில்லை எனவும் எதிர்பாராமல் நடந்த சம்பவம் எனவும் விளக்கம் அளித்துள்ளது. புகாரின்பேரில் மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகும் விசாரித்து வருகிறது.


