"ஊரடங்கால் மாணவர்களுக்கு பள்ளிக்கு செல்ல ஆர்வம் இல்லை” - ஹைகோர்ட் வேதனை!

 
மாணவர்கள்

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு ஆன் லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் கம்ப்யூட்டர், மொபைல் வசதிகளை பெற முடியாது என்பதால், அந்த மாணவர்களுக்காக ஆன்லைன் வழியே கல்வி பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்த  அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

நாளை நவம்பர் 1ஆம் தேதி பள்ளி விடுமுறை: மாவட்ட கலெக்டர் அதிரடி அறிவிப்பு! |  Chennai Today News

மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தவில்லை என்பதை உறுதிசெய்ய  மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து அளவில் குழுக்களை நியமிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, 18 மாதங்களுக்கு பின் மீண்டும் பள்ளி செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வக்குறைவு இருப்பதாகவும், வேலை இழப்பு காரணமாக சொந்த ஊர் திரும்பியோரின் குழந்தைகள் படித்து வந்த அரசுப் பள்ளிகளில் மாற்றுச் சான்று பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்.7 முதல் நேரடி விசாரணை..! | Direct hearing  in Chennai High Court from Sep 7 | Puthiyathalaimurai - Tamil News | Latest  Tamil News | Tamil News Online | Tamilnadu News

பின்னர், இந்த பிரச்னைகள் தொடர்பாக அரசின் ஆலோசனைகளை கேட்டு தெரிவிக்க தலைமை வழக்கறிஞர் அவகாசம் கோரியதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அன்றைய தினம், மாணவர்களின் கல்வி சம்பந்தமாக இந்த இரு பிரச்னைகள் தான் உள்ளனவா? வேறு பிரச்னைகள் உள்ளனவா என்பதை தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.