கல்வி மூலமாக வாழக்கையை படியுங்கள்; கல்வி என்பது மார்க் மட்டுமல்ல - மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை..

 
கல்வி மூலமாக வாழக்கையை படியுங்கள்; கல்வி என்பது மார்க் மட்டுமல்ல - மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை..


கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள்; வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள்; கல்வி என்பது மார்க் மட்டுமல்ல என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.  

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபிலில், ஸ்ரீ சிவகுமார் கல்வி மற்றும் அறக்கட்டளையின் 44வது ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.‌ இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் உள்ள 5 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 2 ஈழத்தமிழர் மாணவர்கள், பெற்றோர்களை இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவர்கள் என 25 அரசுப்பள்ளியில் பயின்ற 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
 

கல்வி மூலமாக வாழக்கையை படியுங்கள்; கல்வி என்பது மார்க் மட்டுமல்ல - மாணவர்களுக்கு சூர்யா அறிவுரை..
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, “அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தலை வணங்குகிறேன். மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும். அனைவருக்கும் சரியான சமமான கல்வி வழங்க அகரம் அறக்கட்டகளை முயற்சி எடுத்து வருகிறது. இது போன்ற கல்வி உதவிதொகை பெறும் நிகழ்வால் தான் வாழ்க்கை முழுமையடைகிறது. கல்வி மூலவமாக வாழ்க்கையை படியுங்கள்; வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள்; வாழ்க்கை முழுவதும் கல்வி ரொம்ப தேவை, கல்வி மார்க் மட்டுமல்ல..!” என மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கினார்.

மேலும், “காலையில் சீக்கிரம் எழ வேண்டும். அதை நான் இப்போது தான் கடைபிடைக்கிறேன்.   பிறரை பழி சொல்லுதல், பிறரை பற்றி எதிர்மறையாக பேசுவதை குறைக்க வேண்டும். சாதி மதத்தை கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். ஒருவர் வீண் சொல், பழி சொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்ககூடாது. அகரம் மூலம் 5,200 மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற 14 வருடங்கள் ஆனது; ஆனால் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிக்கும்போது கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சம் மாணவர்களுக்கு உதவ முடிந்தது.” என்று தெரிவித்தார்.