ரெய்டு நடத்தப்படும் நிறுவனங்களில் பாஜக நிதி பெறாது எனச் சொல்ல முடியுமா ? - சு.வெங்கடேசன் கேள்வி
Apr 18, 2025, 12:01 IST1744957912108
ரெய்டு நடத்தப்படும் நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு பாஜக நிதி பெறாது எனச் சொல்ல முடியுமா ? என சு.வெங்கடேசன் எம்.பி, கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வஃக்புக்கு யாரும் கொடை கொடுக்கலாம் . அது மதத்திற்கு கொடுப்பதல்ல இறைவனுக்கு கொடுப்பது. அப்படி கொடை கொடுப்பவர் 5 ஆண்டுகள் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்கிற சட்டத்திருத்தத்தை கொண்டு வந்த மோடி அவர்களே , நாங்கள் கேட்கிறோம் ?
பாஜகவிற்கு நன்கொடை கொடுக்கிற ஒருவர் பாஜகவின் உறுப்பினராக 5 ஆண்டுகள் இருந்தால் தான் நன்கொடை பெற முடியும் என்று உங்கள் கட்சி சட்டத்தை திருத்த நீங்கள் தயாரா ? ரெய்டு நடத்தப்படும் நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு பாஜக நிதி பெறாது எனச் சொல்ல முடியுமா ? என சு.வெங்கடேசன் எம்.பி, கேள்வி எழுப்பியுள்ளார்.


