தமிழக வெள்ள பாதிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம்

 
Parliament Parliament

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர்பாக விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளார். 

இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரிக்கு உடனடியாக ஒன்றிய அரசு அவசர நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை தந்துள்ளேன். 


குறிப்பாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மக்களின் அன்றாட வாழ்வு நிலை குலைந்து இருக்கிறது. உயிர் இழப்புகளும், சொத்து - ஆதார கட்டுமானங்கள் - பயிர்கள் பெருநாசத்திற்கு ஆளாகியுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் பெரும் துயரில் ஆழ்த்தப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசு அவசர நிவாரண நிதியை தாமதமின்றி வழங்கி வாழ்க்கைக்காக போராடும் மக்களின் துயர் துடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், அதற்காக அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று அத் தீர்மானத்தில் கோரியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.