விரைவு ரயில்களை 7 ஆம் தேதி முதல் இயக்க உத்தரவு - சு. வெங்கடேசன் எம்.பி. நன்றி!

 
su venkatesan

தமிழகத்தில் கூடுதலாக முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளை கொண்ட விரைவு ரயில் இயக்க உத்தரவிற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரயில்வே நிர்வாகத்தை விரைவு வண்டிகளில் பொது பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும் சாதாரண பயணி வண்டிகளை இயக்க வேண்டும் என்றும் நான் தெற்கு ரயில்வேக்கும், ரயில் அமைச்சருக்கும் வேண்டுகோள் விடுத்து இருந்தேன். அதன் அடிப்படையில் சில சாதாரண பயணி வண்டிகளும், பொது பெட்டிகளைக் கொண்ட சில விரைவு வண்டிகள் இயக்க அனுமதித்து இப்போது ஓடிக் கொண்டிருக்கின்றன.

madurai mp

இத்துடன் கூடுதலாக திருச்சி திண்டுக்கல் இடையே அக்டோபர் 7 ,8-ம் தேதியில் இருந்து தினந்தோறும் 10 முன்பதிவில்லா போது பெட்டிகளுடன் விரைவு ரயில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது ,மதுரை, ராமேஸ்வரம் இடையே மன்னார்குடிக்கு இடையேயும் ,அக்டோபர் 7ஆம் தேதி முதல் விரைவுவண்டி பொது பெட்டிகளுடன் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  புனலூருக்கும்,  திருவனந்தபுரத்திற்குமிடையே பொது பெட்டிகளை கொண்ட விரைவுவண்டி நாள்தோறும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


இவற்றிற்காக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் சிறப்பு விரைவு வண்டிகளை இணைக்கும் என் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்.  அதேபோல் எல்லா ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் சாதாரண பயணி வண்டிகளையும் இயக்கிட என் கோரிக்கை மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.