"நானும் கவினும் காதலித்தது உண்மைதான்"- சுபாஷினி விளக்கம்

 
ச் ச்

உண்மை தெரியாமல் எனக்கும் கவினுக்கும் இடையிலான உறவை பற்றி யாரும் பேசாதீர்கள் என இளம் பெண் சுபாஷினி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவின்குமார் (28)தனது உடல்நிலை சரியில்லாத தாத்தாவைச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று திரும்பும்போது வழிமறித்து அருவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளி சுர்ஜித்தின் தாய் தந்தை இருவரும் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாக பொறுப்பில் உள்ளனர். காவல்துறையில் பணியாற்றி வரும் சரவணன் - கிருஷ்ணகுமாரி  தம்பதியின் மகளைக் காதலித்து வந்ததால் இந்தப்  படுகொலை நிகழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் ஐ.டி ஊழியர் கவினை கொலை செய்த சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினி வெளியிட்டுள்ள வீடியோவில், “எனக்கும் கவினுக்கும்  என்ன உறவு என்று எங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும், உண்மை தெரியாமல் எனக்கும் கவினுக்கும் இடையிலான உறவை பற்றி யாரும் பேசாதீர்கள், இந்த சம்பவத்திற்கும் எனது தாய் மற்றும் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களை தண்டிக்க நினைப்பது தவறு. எனக்கும் கவினுக்கும் நடந்தது யாருக்கும் தெரியாது.என்னையும் கவினையும் பற்றி யாரும் தவறாக பேச வேண்டாம். நானும் கவினும் காதலித்தது உண்மைதான். ஆனால் எங்கள் காதலை வீட்டில் சொல்வதற்கு அவகாசம் தேவைப்பட்டது. நானும், கவினும் உயிருக்கு உயிராக காதலித்தோம். செட்டில் ஆக 6 மாதம் தேவை என கவின் சொன்னதால், அப்பாவிடம் அவனை காதலிப்பதாக நான் சொல்லவில்லை. ஆனால் சுர்ஜித் அப்பாவிடம் கூறிவிட்டான். இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை.வீட்டுக்கு பெண் கேட்க வருமாறு சுர்ஜித்தான் கவினை அழைத்தான். என் பெற்றோருக்கு இதுபற்றி எதுவும் தெரியாது.” எனக் கூறியுள்ளார்.