திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த காணிக்கை! எத்தனை கோடி தெரியுமா?

 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த காணிக்கை! எத்தனை கோடி தெரியுமா?


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடப்பு செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரூ.5.15 கோடியை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். 

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிகின்றனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றாக விளங்கும் இக்கோயில்,  குரு ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் பண்டிகை காலங்களில் இங்கு கூட்டம் களைக்கட்டும். உள்ளூர் மட்டுமில்லாது வெளியூர்களிலிருந்தும் வந்து மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அப்படி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.  

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த காணிக்கை! எத்தனை கோடி தெரியுமா?

அந்தவகையில் கடந்த மாதம் ( ஆகஸ்ட்)  பக்தர்கள் செலுத்திய உண்டியல் காண்டிக்கை எண்ணும் பணி கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. அதன்படி கடந்த மாதம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு உண்டியல் காணிக்கையாக ரூ. 5.15கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் 2 கிலோ 352 கிராம் தங்கமும், 41கிலோ 998 கிராம் வெள்ளியும்,  1,589 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.  அத்துடன் கோயில் யானை பராமரிப்புக்கான உண்டியல் மூலம் 1 லட்சத்து 67 ஆயிரத்து 860 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. அத்துடன் கோசாலை பராமரிப்புக்காகவும் ரூ. 82,722 வருமானமாக கிடைத்துள்ளது.