நாடாளுமன்றத்தில் தேவரின் சிலை...தமிழக அரசியல் கட்சிகள் ஒரு பைசா கூட தரவில்லை - சுப்பிரமணியசுவாமி

 
subramanian swamy

நாடாளுமன்ற கட்டிடத்தில் தேவரின் சிலை அமைப்பதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒரு பைசா கூட தரவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி குற்றம் சாட்டியுள்ளார். 

முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாள், குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மரியாதை செலுத்தினார். இதேபோல் தலைவர்கள் பலரும் அவரது பிறந்த நாளையொட்டி அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், நாடாளுமன்ற கட்டிடத்தில் தேவரின் சிலை அமைப்பதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒரு பைசா கூட தரவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்று நான் பாராளுமன்ற கட்டிடத்தில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தேன். 2000 ஆம் ஆண்டு லோக்சபா சிலை கமிட்டி மதிப்பிற்குரிய தேவர் சிலையை அமைப்பதற்கான எனது முன்மொழிவை ஏற்றுக்கொண்டது. ஆனால் அந்த சிலையை எனது செலவில் செய்து தர வேண்டும் என்று கமிட்டி கூறியது. தமிழகத்தை சேர்ந்த எந்த அரசியல் கட்சியும், அரசும் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.