சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு.. பொதுமக்கள் தவிப்பு..

 
சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு.. பொதுமக்கள் தவிப்பு..


சென்னை எண்ணூர் ரயில் நிலையத்தில் உயர்மின் அழுத்தம் தொழில்நுட்பம் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், அரக்கோணம், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்திற்காக புறநகர் ரயில் சேவைகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். சிறு, குறு வியாபாரம் செய்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வோர் என பெரும்பாலானவர்களுக்கு ரயில் போக்குவரத்து எளிமையானதாக இருக்கிறது. ஆனால் மின்சார ரயில்களில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளால், ரயில் சேவை பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.  

சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு.. பொதுமக்கள் தவிப்பு..

இந்த நிலையில் இன்று காலை சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் எண்ணூர் ரயில் நிலையத்தில் உயர்மின் அழுத்தம் தொழில்நுட்பம் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. எண்ணூர் ரயில் நிலையத்தில்  ஒன்றன் பின் ஒன்றாக ஐந்திற்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.  காலை  7 மணி முதல் ரயில்கள் இயக்கப்படாததால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகினர்.  இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர்.