‘செருப்பால அடி...படிப்பறிவு இல்லாத கழுத’- ஜோதிகாவை வெளுத்து வாங்கிய சுசித்ரா

 
‘செருப்பால அடி...படிப்பறிவு இல்லாத கழுத’- ஜோதிகாவை வெளுத்து வாங்கிய சுசித்ரா

கங்குவா படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஜோதிகாவை அருவருக்கத்தக்க வார்தைகளால் ஆபாசமாக சுசித்ரா பேசிய வீடியோ வைரலாகிவருகிறது.

ஜோதிகாவை இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்த சுசித்ரா …. வைரலாகும்  வீடியோ!


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ள திரைப்படம் கங்குவா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி, வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா மாறுபட்ட தோற்றம் மற்றும் படத்தின் டீசர், ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவின் திரைப்படம் திரைக்கு வந்ததால் ரசிகர்கள் மத்தியில், பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் 3டி தொழில்நுட்பத்திலும் இப்படம் தயாராகியுள்ளது.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி  ஆகிய ஐந்து மொழிகளில் 280 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட கங்குவா படத்திற்கு பல்வேறு எதிர்மறை விமர்சனங்களும், படம் குறித்த அவதூறுகளும் பரப்பப்பட்டன. இதற்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்த நடிகை ஜோதிகா,  கங்குவாவை விட மோசமான படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் கங்குவா முதல் சோ முடியும் முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது அதிர்ச்சியளிக்கிறது.. கங்குவா படத்தில் இடம்பெற்றுள்ள நல்ல அம்சங்கள் படத்தை விமர்சிப்பவர்களுக்கு தெரியவில்லை என ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

ஜோதிகாவின் பதிவை மேற்கோள் காட்டி வீடியோ வெளியிட்டு அவருக்கு பதிலடி கொடுத்துள்ள பாடகி சுசித்ரா, “சூர்யா... நீ புத்திசாலினு நினைச்சோம். ஆனால் நீ மடசாம்பிராணினு தெரியாம போச்சு... நீ என்னத்த கல்யாணம் பண்ணிட்டு உட்கார்ந்து இருக்கிற... கங்குவா ஒரு தப்பான படம். அதை விட்டுவிடுங்க! இப்படம் சூர்யாவின் நடிப்பை தீர்மானிக்கப்போவது கிடையாது. ஒரு கங்குவா.. பிதாமகனை பின்னுக்கு தள்ளிவிடுமா? படிப்பறிவு இல்லாத கழுதை... என்ன எழுதியிருக்கு பாருங்க... Kanguva- a spectacle in cinema.. What is the spectacle in cinema? இது என்ன இங்கிலீசா? இங்கிலீஷ் தெரியலனா வாயை மூடிட்டு வீட்டுல உட்காரனும். பிஆர்ஓ இருக்காங்கள்ள அவங்கல எழுதவிடணும். செருப்பால அடி... நீங்களே கங்குவா திரைப்படம் முதல் பாதி நன்றாக இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் டிக்கெட் வாங்கி விட்டு நாங்க அரை மணிநேரம் முடிந்து வரணுமா மேடம்? இந்திய சினிமாவுக்கு ஜோதிகா தர்ம தேவதை... அடுத்து நீதி தேவதை! பேரழகன் பிச்சக்காரி... பிச்சை கேட்கிறது. ஒரு பிச்சைக்காரியை சூர்யா கல்யாணம் செய்துள்ளார்!” என சாடியுள்ளார்.