விஜய் பிரச்சார இடம் திடீர் மாற்றம்… என்ன ஆச்சு..?

 
Q Q

நாகையில் நாளைய தினம் (செப்டம்பர் 20) தவெக தலைவர் விஜய் புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி ஸ்டேடியம், நாகூர் புதிய பஸ் ஸ்டாண்ட், வேளாங்கண்ணி ஆர்ச் ஆகிய இடங்களில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

இதற்காக நாகை போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். மேற்சொன்ன லிஸ்டில் புத்தூர் ரவுண்டானாவிற்கு பதிலாக அண்ணா சிலை அருகே உரையாற்ற தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்கள் பின்னணியில் இருக்கலாம் என்கின்றனர். இந்நிலையில் நாளை நண்பகல் 12.30 மணியளவில் நாகையில் உள்ள புத்தூர் அண்ணா சிலைக்கு விஜய் வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.