திடீரென குறுக்கே வந்த மாடு.. தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவி.. நெல்லையில் பரபரப்பு..!!
திருநெல்வேலியில் திடீரென மாடு குறுக்கே வந்து முட்டியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 55 வார்டுகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான வார்டுகள் நகரின் மையப் பகுதியிலும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கூட்ட நெரிசலான இடங்களிலும் அமைந்துள்ளது. இந்நிலையில் மாநகரப் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பரபரப்பாக செல்லக்கூடிய சாலைகளில் மாடுகள் ஆங்காங்கே சுற்றி திரிகின்றன. இதுபொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளில் தெரியும் மாடுகளால் தொடர் விபத்துகளும் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே பயணிக்கும் சூழல் உள்ளது.
The owners of cows should be imprisoned
— Nirmal from Pallavaram (@im_rnirmal) October 23, 2024
This issue is existing in Many places #nellai #chennai #tambaram #tamilnadu pic.twitter.com/ceJZBFwodK
அந்தவகையில் நெல்லை 55வது வார்டு திருமால் நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த ஒரு மாடு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மீது ஸ்வதிகா மீது திடீரென மோதியது. எதிர்பாராத விதமாக மாடு மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி பலத்த காயமடைந்தார். தற்போது மாணவி ஸ்வஸ்திகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைக்கின்றன.
மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த, மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து , கடுமையான எச்சரிக்கை வழங்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.


