தொழிலதிபர் மகளுடனான திருமணத்தை காதலி நிறுத்தியதால் தற்கொலை! 3 நாட்களுக்கு பின்னர் போரூர் ஏரியில் இளைஞர் உடல் மீட்பு

 
t

இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி உல்லாசம் அனுபவித்துவிட்டு அவரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தையும் கறந்து விட்டு திருமணம் செய்து கொள்ளாமல் தொழிலதிபரின் மகளை திருமணம் செய்ய இருந்த நிலையில் காதலி திருமணத்தை போலீசில் புகார் கொடுத்து நிறுத்திவிட்டார்.   இதனால் மன உளைச்சலில் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடல் 3 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டிருக்கிறது.

 சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த வாலிபர் நிசாந்த்.   இவர் சென்னையில் உள்ள ஒரு  இளம்பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.  இருவரும் பள்ளியில் படிக்கும் போதில் இருந்து பழகி வந்திருக்கிறார்கள்.  பின்னர் காதலித்து வந்திருக்கிறார்கள்.  வளர்ந்த பின்னர் இளம் பருவத்திற்கு வந்த பின்னும் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார். 

l

 அந்த இளம் பெண்ணின் பூர்வீக சொத்து விற்றதில் கிடைத்த 68 லட்சம் ரூபாய் பணத்தையும் வாங்கிக் கொண்டிருக்கிறார் நிஷாந்த் . அந்த பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் அந்த இளம் பெண்ணையும் சொன்னபடி திருமணம் செய்யாமல் ஏமாற்றி இருக்கிறார்.  அது மட்டுமல்லாமல் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மகளை திருமணம் செய்வதற்காக ஏற்பாடு செய்து வந்திருக்கிறார். 

 இதை அறிந்த அந்த பெண் மதுரவாயல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.  இந்த விவரம் தெரிந்ததும் தொழில் அதிபர் அந்த திருமணத்தை நிறுத்திவிட்டார்.   இளம் பெண் கொடுத்த புகாரில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து நிஷாந்தை தேடி வந்த நிலையில்  அவர் தலைமறைவானார் . 

நேற்று முன்தினம் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார் .  நண்பரின் காரை வாங்கிக் கொண்டு சென்ற நிஷாந்த் சிறிது நேரத்தில் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில்  மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.  அதில் போரூர் ஏரியில் குறித்து தற்கொலை செய்யப் போகிறேன் என்று கூறியிருக்கிறார் .  உடனே அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அங்கு சென்று பார்த்து இருக்கிறார்கள்.   அப்போது போரூர் ஏரிக்கு அருகில் கார் மட்டும் நின்று இருக்கிறது.   அவர்கள் நிஷாந்தை தேடி பார்த்து விட்டு திரும்பி விட்டார்கள் .  அதன் பின்னர் போலீசுக்கு தகவல் சொல்ல,  போலீசார் தீ அணைப்பு வீரகள் உதவியுடன் உடலை தேட ஆரம்பித்தனர்.  மூன்று நாட்களுக்கு பின்னர்  வாலிபர் நிஷாந்த் உடல் மீட்கப்பட்டிருக்கிறது.