“மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது எல்லாம் தெரியும்”- சுந்தர்.சி

 
ச்

பழனி முருகன் கோயிலில் இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி, நடிகை குஷ்பூ சாமி தரிசனம் செய்தனர். 


​​
பழனி முருகன் கோயிலுக்கு நடிகர் சுந்தர் சி, அவரது மனைவியும் நடிகையுமான குஷ்பூ  குடும்பத்துடன்  சாமி தரிசசம் செய்ய வருகை தந்தனர். அவர்களுடன் நடிகர் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் அவரது தாயாரும் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அடிவாரத்திலிருந்து பேட்டரி கார் மூலம் ரோப்கார் நிலையத்திற்குச் சென்ற அவர்கள், அங்கிருந்து மலைக்கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டனர். ​மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, கோயில் கோபுரத்தை நோக்கி நின்ற சுந்தர் சி, சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாகக் கண்களை மூடி மனமுருகிப் பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது குறித்து சுந்தர் சி யிடம் கேட்டபோது தற்போது முருகனைப் பார்க்க வந்துள்ளேன். மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது எல்லாம் தெரியும் எனச் சுருக்கமாகக் கூறிவிட்டு நகர்ந்தார்.