ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - ஜவாஹிருல்லா வரவேற்பு

 
tn

ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடுத்துள்ள வழக்கு வரவேற்க்கதக்கது  என்று எம்எல்ஏ ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

rg

ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.  அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என புகார் கூறியுள்ளது. மேலும் குறிப்பிட்ட காலம் வரம்புக்குள் மசோதாக்கள் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

tn

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த 49 வாழ்நாள் சிறைவாசிகளின் முன்விடுதலை உட்பட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடுத்துள்ள வழக்கு வரவேற்க்கதக்கது.

தமிழ்நாடு அரசின் மனுவில்:


"The Governor by not “signing remission orders, day to day files, appointment orders, approving recruitment orders, granting approval to prosecute Ministers, MLAs involved in corruption including transfer of investigation to CBI by Supreme Court, Bills passed by Tamil Nadu Legislative Assembly” is bringing the entire administration to a grinding halt and creating adversarial attitude by not cooperating with the State administration." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து அரசின் பணிகளை ஆளுநர் முடக்கி வருகிறார் என்று தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு  என்று குறிப்பிட்டுள்ளார்.