#Supremecourt தமிழக ஆளுநருக்கு இன்று ஒரு நாள் மட்டுமே அவகாசம்- கண்டிப்பு காட்டிய உச்ச நீதிமன்றம்!

 
supreme court supreme court

பொன்முடியை மீண்டும் அமைச்சராக  பதவிப்பிரமாணம் செய்யாததை எதிர்த்து தமிழக அரசால் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சராமாரி கேள்விகளை எழுப்பி உள்ளது.

Ponmudi

இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது, நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப்பிரமாணம் செய்ய முடியாது என எப்படி கூற முடியும்? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்றும் தனது அதிருப்தியிணை வெளிப்படுத்தினார்.

மீண்டும் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக முடிவெடுக்க இன்று ஒரு நாள் மட்டும் கெடு விதிக்கிறோம். இல்லையென்றால் நாளை கடும் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.