முல்லை பெரியாறு விவகாரம்...பள்ளி குழந்தைகள் சண்டை போடுவது போல் உள்ளது - உச்சநீதிமன்றம்!

 
supreme court supreme court

ஒருவார காலத்திற்குள் முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வைக்குழு கூட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாடும், கேரளாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பது பள்ளி குழந்தைகள் சண்டை போடுவது போல் உள்ளது என நீதிபதி விமர்சித்தார்.  இது போன்ற விவரங்கள் உண்மையில் நீதித்துறை தலையீடு தேவையா என்று நாங்கள் நினைக்கிறோம். உரிய தீர்வு காண இயலாவிட்டால் உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் , அதன் அடிப்படையில் நீதிமன்றம் தீர்வு காணும் என தெரிவித்தார். 

அணை பராமரிப்பு பணிகளைக் கேரளா மேற்கொள்ள விடுவதில்லை , மரத்தை வெட்டவிடுவதில்லை என இரு மாநிலங்களும் குற்றம் சாட்டி வருவதை நீதிமன்றம் விமர்சித்துள்ளது. ஒருவார காலத்திற்குள் முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வைக்குழு கூட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டத்தில் முன்வைக்கப்படும் பிரச்னைகளுக்கு அதற்கடுத்த 2 வாரங்களில் தீர்வு காண வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டுக்கு, கேரளா அனுமதி மறுக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையீடு காட்ட வேண்டுமா? என நீதிபதி கேள்வி எழுப்பினர்.  25 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியில் கேரளா செயல்படுவதாக தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டியுள்ளது.