தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி!

 
supreme court supreme court

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

தேசிய கல்விக் கொள்கைப்படி தமிழ்நாடு, கேரளா,மேற்கு வங்கத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனுவில் கோரியிருந்தார். இந்த நிலையில், தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது . மாநில அரசு, தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல எனவும் கருத்து தெரிவித்துள்ளது.