ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்..!!

 
ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்..!! ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்..!!

சிறுவன் கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்திக்கு உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.  முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.  

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட புகாரில்  புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி மற்றும் இந்தக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக  காவல்துறை ஏடிஜிபி ஜெயராம் ஆகியோ போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏடிஜிபி ஜெயராமுக்கு கடத்தலில் தொடர்பு இருப்பதாகவும், அவருடைய வாகனம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து சீருடையில் நீதிமன்றத்தில் ஆஜரான ஏடிஜிபி ஜெயராமை , போலீஸார் ஜூன் 16  மாலை நீதிமன்ற வளாகத்திலேயே  கைது செய்தனர்.  ஆள் கடத்தல், குற்றச்செயலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு.. 
இந்தக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு நீதிபதிகள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். அவர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், பொது வாழ்க்கையில் இருப்பவர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தது. இதனையடுத்து பூவை ஜெகன்மூர்த்தி  தலைமறைவானதாக கூறப்படுகிறது.  திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னையில் 4  தனிப்படைகள் அமைத்து அவரை சிபிசிஐடி போலீசார் தேடிவந்தனர். இதனிடையே முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில், ஜெகன்மூர்த்தி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், சிறுவன் கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்திக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.